ஒற்றைப் பாடலுக்கும் ஓகே: மீனாட்சி

விஷால் நடிக்கும் தோரணை படத்தில் ஓரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார்.
இப்போது த.நா.அல 4777 எனும் படத்தில் நடிக்கும் மீனாட்சிக்கு, அதன் பிறகு வேறு படங்களே ஒப்பந்தம் ஆகவில்லை. இதனால் ஹீரோயின் வாய்ப்புக்காக இனியும் காத்திருந்தால் இளமை போய்விடும், மார்க்கெட்டும் போய்விடும் என்பதை உரிய நேரத்தில் புரிந்து கொண்ட மீனாட்சி, இப்போது ஒற்றைப் பாடலுக்கு குத்தாட்டம் போடவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
அப்படி அவர் ஆட்டம் போடவிருக்கும் படம் தோரணை. விஷால் நடிக்கும் இந்தப் படம் விரைவில் துவங்கவிருக்கிறது. சபா அய்யப்பன் இயக்குகிறார். மணி ஷர்மா இசையமைக்கிறார். காரைக்குடியில் நடக்கும் இந்தப் படப்பிடிப்பில் விஷாலுடன் ஆட்டம் போடவிருக்கிறார் மீனாட்சி.
இந்தப் படம் குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஒரு பாட்டுக்கு நடிப்பதில் வருத்தமில்லை. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் வராத போது கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லையே, என்கிறார் மீனாட்சி.
இதை ஆட்டோவுக்குப் பின்னாடியே எழுதி வைக்கலாமே...!


Click it and Unblock the Notifications











