நமீதாவுக்கு வயசு '13'!!!

ரம்பை, மேனகை, ஊர்வசி என்று சொல்வார்கள். அவர்களின் ஒட்டுமொத்த அழகையும் ஒருசேர கொண்டுள்ள அழகிய 'ராட்சசி' நமீதா.
எங்க அண்ணா மூலம் நடிக்க வந்த நமீதா, எங்கே, நம்மை அண்ணா என்று கூப்பிட்டு விடப் போகிறாரோ என்று 'பயப்படும்' ஆண் ரசிகர்களைக் கொண்டிருப்பவர்.
முதல் படத்திலிருந்து லேட்டஸ்டாக நடித்துக் கொண்டிருக்கும் படம் வரை தொடர்ந்து கவர்ச்சி திலகமாக மாறி, ரசிகர்களை எகிற வைத்துக் கொண்டிருக்கும் நமீதா வருகிற 10ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
ஹேப்பி பர்த்டே என்று கூறி கை குலுக்கி, எத்தானவது பெர்த் டே என்று கேட்டால், 12 முடிஞ்சு போச்சு, 13 பிறக்குது என்று நக்கலடிக்கிறார் நமீதா.
வழக்கமாக தனது பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாடுவதில்லையாம் நமீதா. ஆனால் இந்த முறை தனது ரசிகர்கள், சிறப்பாக கொண்டாட விரும்புவதால் அவர்களுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளாராம். அதே சமயம், உருப்படியான சேவைகளில் ஈடுபடுமாறு அவர்களை அறிவுறுத்தியுள்ளார்.
அவரும் உருப்படியான ஒரு திட்டத்தை வைத்துள்ளார். சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு அன்றைய தினம் செல்லும் நமீதா, அன்று முழுவதும் அங்குள்ள குழந்தைகளுடன்தான் செலவழிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
நல்ல மனசுதான்!


Click it and Unblock the Notifications











