அஜந்தா, எல்லோரா, நமீதா!

By Staff

Namitha
அஜந்தா, எல்லோரா போய் பாருங்கள். அங்குள்ள சிலைகள் எல்லாம் என்னை மாதிரிதான் கவர்ச்சியாய், குண்டாய் இருக்கும் என்கிறார் நமீதா.

கவர்ச்சியாக நடிப்பதற்கு கொஞ்சமும் தயங்காத வெகு சில நடிகைகளில் நமீதாவும் ஒருவர். அவரது சம்பளத்தை சரியாக தந்து விட்டால் போதும், திருப்திகரமாக நடித்துத் தருவார்.

இப்படி திகட்ட திகட்ட கிளாமராக நடிக்கிறீர்களே என்ன காரணம் என்று அவரிடம் கேட்டால், புது விளக்கம் கொடுத்து அசத்துகிறார். நான் 'டிமாண்ட் அன்ட் சப்ளை தியரி'யைத்தான் பின்பற்றுகிறேன். அதாவது கேட்கும் பொருளைக் கொடுப்பதுதான் எனது பாலிசி.

என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?. பெரும்பாலும் கவர்ச்சியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அதை நான் கொடுக்கிறேன். அதேசமயம், எனது எல்லை என்று என்று தெரியும். கொடுக்க முடிவதை கொடுக்கிறேன். அதிகபட்ச எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற முடியாது.

எல்லா நடிகைகளும் ஸ்லிம் ஆக இருக்கிறார்களே என்று நான் கவலைப்பட முடியாது. எனக்கு என்னைப் பற்றி மட்டும்தான் கவலைப்பட முடியும். எனது உடல் வாகு இப்படித்தான். இதை நான் வெறுக்கவில்லை. இப்படிப்பட்ட உடம்பு எல்லோருக்கும் கிடைத்து விடாதே. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள்தான். எனது உயரத்திற்கேற்ற உடல்வாகுதான் இது.

அஜந்தா, எல்லோரா குகைகளுக்குப் போய் பாருங்கள். என்னைப் போன்றுதான் அங்குள்ள பெண் சிலைகள் இருக்கும். ஒரு சிலை கூட ஒல்லியான பெண்ணாக இருக்காது. அந்தக் கால சிற்பிகள் முட்டாள்கள் கிடையாது. அவர்களுக்குத் தெரியும், எந்தப் பெண் அழகானவள், செக்ஸியானவள் என்று. எனவேதான் எனது உடல்வாகு குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதே கிடையாது. ஆண்டவன் கொடுத்த உடல் இது என்கிறார் பெருமையாக.

எல்லாம் சரி நமீதா, இப்படியே போய்க் கொண்டிருந்தால் எப்படி. எப்போது கல்யாணம் என்று கேட்டால், எங்களது ஊரில் எல்லாம் பெண்களுக்கு 19 வயதிலேயே கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். நான் இப்போதைக்கு கல்யாணம் குறித்து யோசிக்கவில்லை. கேரியர்தான் முக்கியம் என்று குழப்பமான பதிலைக் கொடுத்தார்.

ஒருவேளை இன்னும் 19 வயசு ஆகலையோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X