தெலுங்கு அழகிய தமிழ்மகனில் நமீதா!

2007-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஜய் இருவேடங்களில் நடித்திருந்தார். ஸ்ரேயா, நமீதா நாயகிகளாக நடித்தனர். அப்பச்சன் தயாரித்த படம் இது.
வருகிற ஆபத்தை முன்கூட்டியே உணரும் திறன் கொண்ட ஒருவர், அவரைப் போன்ற உருவத்துடன் உள்ள மற்றொருவரால் சந்திக்கும் பிரச்சினைகள்தான் இந்தப் படம்.
இப்போது தெலுங்கில் அட்டாலா வெங்கட்ராவ் மற்றும் எஸ் ஜமீலா தயாரிக்க உருவாகிறது. படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் இன்னும் வெளியாகவில்லை.
தமிழில் சரியாகப் போகாவிட்டாலும் தெலுங்கில் சிறிது மாற்றங்களுடன் இந்தப் படத்தை எடுக்கப் போகிறார்களாம். இப்போதைக்கு நமீதாவை மட்டும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். அழகிய தமிழ் மகனில் நமீதாவை ஒரு பாடலில் மட்டும் பயன்படுத்தியிருந்தார்கள். ஆனால் இந்தத் தெலுங்குப் படத்தில் கவர்ச்சி விருந்து படைக்குமளவு நமீதாவின் வேடம் பெரிதாக்கப்படுவதாக அவரிடம் கூறி சம்மதம் வாங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











