நில் கவனி என்னைக் காதலி... நமீதா!

இந்த முடிவின் முதல் கட்டமாக மலையாளத்தின் பிரபல இரட்டை இயக்குநர்கள் பிரமோத்-பப்பன் இயக்கும் 'நில், கவனி, என்னை காதலி'யில் நமீதா நாயகியாக நடிக்கிறார். தமிழில் பிரமோத் - பப்பனுக்கு இது முதல் படம்.
இதில் அன்பு படத்தில் நடித்த பாலா கதாநாயகனாக நடிக்கிறார். கலாபவன் மணி, பவன், ஆசிஷ் வித்யார்த்தி, 'பிதாமகன்' மகாதேவன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் முதலில் மலையாளத்தில் உருவாகவிருந்தது. பிறகு, நமீதாவின் முக்கியத்துவம் கருதி தமிழிலேயே எடுக்கப்படுகிறதாம்.
திருப்பூரில் குடும்பத்துடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் நாயகியை ஒரு போலீஸ் அதிகாரி கட்டாயத் திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அதற்கு அவள் மறுக்கவே, நாயகியின் தந்தையை சுட்டுக்கொல்கிறார் போலீஸ் அதிகாரி. இதையடுத்து அந்தப் போலீஸ் அதிகாரியை புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு, பழிவாங்கும் நாயகியைப் பற்றியதே கதை.
இதில் நமீதா ஆக்ஷன் நாயகியாக வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். கேரளாவில் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் படத்த வெளியிட்டுவிடத் திட்டமிட்டுள்ளனர்.
வசனம் -கண்மணி ராஜா முகமது. திரைக்கதை -ராஜேஷ் ஜெயராம். இசை -அபிஷேக். பாடல்கள் -ஏக்நாத், சினேகன், கிருதியா. சண்டைக் காட்சி -மாஃபியா சசி. மக்கள் தொடர்பு ஏ ஜான்.


Click it and Unblock the Notifications











