நமீதாவின் நல்ல மனசு!!

By Sudha

இளைஞன் படம் வெளியாவதையொட்டி சென்னை பாலவிகாஸ் ஆதரவற்ற இல்ல சிறுவர் சிறுமியருக்கு உணவு மற்றும் பரிசுப் பொருள்களை வழங்கினார் நமீதா.

கவர்ச்சியில் காட்டும் தாராளத்தை, ஏழைகளுக்கு நல்ல காரியங்கள் செய்வதிலும் காட்டுபவர் நடிகை நமீதா.

சமீபத்தில் சென்னையில் நடந்த இளைஞன் பட இசை வெளியீட்டுக்கு வந்தவர், அடுத்த நாள் நடந்த அந்தப் படத்தின் பிரஸ்மீட்டிலும் பங்கேற்றார்.

பின்னர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாலவிகாஸ் ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்றார். தான் நடித்த இளைஞன் படம் வெளியாவதையொட்டி, அந்த இல்லத்தின் சிறுவர் சிறுமிகள் அனைவருக்கும் இனிப்புகள், பரிசுப் பொருள்கள் மற்றும் உணவு வழங்கி, சிறிது நேரம் அந்தக் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தார்.

அவரது மானேஜர் ஜான் உடன் சென்றிருந்தார்.

இதுகுறித்து நமீதா கூறுகையில், "இளைஞன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனது காட்சிகளைப் பார்த்துவிட்டு முதல்வர் கலைஞர் பாராட்டினார். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் பாராட்டினார். நடிப்பு வாழ்க்கையில் ஒரு ஸ்டேஜுக்கு வந்திட்டேன். இனி நல்ல ரோல்களில் மட்டும்தான் கவனம் செலுத்துவேன். என்னதான் பிரபலமான நடிகையாக இருந்தாலும், இந்த மாதிரி சிறுவர்களுக்கு உதவி செய்யும்போதுதான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கிறது. அதனால்தான் இந்தப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X