மறுபடியும் 'பெருக்கும்' நயனதாரா!

சத்யம் படத்தில் இதுவரை பார்த்திராத நயனதாராவைப் பார்க்கலாம். அந்த அளவுக்கு தனது உடலை கடுமையான உணவுக் கட்டுப்பாடு பிளஸ் உடற்பயிற்சியின் மூலம் குறைத்திருக்கிறார்.
படு ஸ்லிம்மாக, ெசக்ஸியாக காணப்படும் நயனதாரா, இந்த அளவுக்கு எடை குறைந்ததற்கு முக்கிய காரணம், படத்தில் வரும் ஒரு பாடலுக்கு படு செக்ஸியாக தோன்ற வேண்டும் என்பற்காகத்தானாம்.
இப்படி கஷ்டப்பட்டு எடையைக் குறைத்த நயனதாரா படு செக்ஸியாகவும், ஸ்லிம்மாகவும் இருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அது அவரது நலம் விரும்பிகளிடையே விசனத்தை ஏற்படுத்தி விட்டதாம்.
'சைஸ் ஸீரோ' லெவலுக்கு உடம்பைக் குறைத்தால் எப்படி, முன்பு போலவே கொஞ்சம் சதைப்பாங்குடன் இருந்தால்தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒல்லிப்பிச்சான் நயனதாராவை பார்க்கவே சகிக்கவில்ைல என்று அவர்கள் கவலை தெரிவிக்க, யோசித்துப் பார்த்த நயனதாரா மீண்டும் கொஞ்சம் போல உடம்பை ஏற்ற முடிவு செய்துள்ளாராம்.
இதனால் உணவுக்கட்டுப்பாட்டை லேசாக தளர்த்தியுள்ள அவர், உடற்பயிற்சிக்கும் சற்று பிரேக் விட்டுள்ளாராம். மறுபடியும் பழைய மாதிரி ஆகி விடுகிறேன் என்று தன்னைப் பற்றி கவலையுடன் விசாரிப்பவர்களிடம் ஆறுதலாக கூறி வருகிறாராம்.
கமல்தான் இப்படி உடம்பை ஏற்றி, இறக்குவதில் 'கிங்' என்பார்கள், நயனதாரா 'ராணி' ஆகிறாரோ?


Click it and Unblock the Notifications











