மீண்டும் பெயர் மாறிய அமோஹா

By Staff

Nisha Kothari
நிஷா கோத்தாரி என்று தனது பெயரை மாற்றிய ஜேஜே பட புகழ் அமோஹா, மறுபடியும் தனது பெயரை மாற்றி விட்டார்.

சரண் இயக்கத்தில் உருவான ஜேஜே படம் மூலம் தமிழுக்கு வந்தவர் அமோஹா. ஆனால் அவரது ஒரிஜினல் பெயர் நிஷா கோத்தாரி. தமிழுக்காக அமோஹா என பெயர் மாறினார்.

தமிழில் எதிர்பார்த்த ஆதரவு இல்லாததால் இந்திக்கு நிஷா கோத்தாரியாக பெயர் மாறிப் போனார். அங்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு வந்த அமோஹா இப்போது மறுபடியும் தனது பெயரை மாற்றி விட்டார்.

இனிமேல் அவர் பிரியங்கா கோத்தாரியாம். ஏன் இப்படி என்று கேட்டால், எனது பெயரே பிரியங்கா கோத்தாரிதான். சினிமாவுக்காக எனது பெயரை பலரும் பலவாறாக மாற்றஇ விட்டனர்.

ஆனால் அது எனக்கும், எனது வீட்டினருக்கும் பிடிக்கவில்லை. இதனால் எனது பெயரிலேயே நடிக்க ஆரம்பித்துள்ளேன் என்கிறார்.

கிளாமராக நடிப்பதில் பிரியங்காவுக்கு வருத்தம் ஏதும் இல்லையாம். காரணம் அதற்கேற்ற உடல்வாகு இருக்கிறது, நடிக்கிறேன் என்கிறார்.

தமிழில் இப்போது கார்த்திகை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அமோஹா என்ற நிஷா கோத்தாரி என்ற பிரியங்கா கோத்தாரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X