பூனம் பாஜ்வாவின் புல்லரிக்கும் அவதாரம்

By Sudha

ஐந்தே ஐந்து தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ள பூனம் பாஜ்வா தற்போது கிளாமர் குளத்தில் குதித்துள்ளார். எதிரி எண் 3 படத்தில் அவர் முழுமையான கிளாமரில் நடித்துள்ளாராம்.

இதுவரை பூனம் பாஜ்வாவுக்கு தமிழில் பெரிய பிரேக் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் நல்ல அழகும், நடிப்பும் இருந்தும் கூட அவர் பெரிய லெவலுக்கு உயராமல் உள்ளார். இதற்கு பூனமும் ஒரு காரணம். தன்னைத் தேடி வரும் பட வாய்ப்புகளை அவர் ஏற்பதில் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கிளாமர் காட்டுவதிலும் அவர் சுணக்கம் காட்டி வந்தார். கிளாமர் காட்டித்தான் வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. நான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதினால் என்னிடம் வரட்டும், நான் நடித்துக் கொடுக்கத் தயார், சம்பளத்தைக் கூட நான் பெரிதாக எதிர்பார்க்கவில்லை என்று கூறி வந்தார் பூனம்.

இந்த நிலையில் தற்போது திடீரென தனது கொள்கையை தளர்த்தி, உடைகளையும் தளர்த்தத் தொடங்கி விட்டார் பூனம். எதிரி எண் 3 படத்தில் அவர் கிளாமர் கோலத்தில் புது அவதாரம் பூண்டுள்ளாராம்.

இப்படத்துக்காக சமீபத்தில் கவர்ச்சிகரமான போட்டோ செஷனை நடத்தி முடித்துள்ளார் பூனம். இப்படத்தில் ஸ்ரீகாந்த்துடன் இணைந்து நடிக்கிறார் பூனம்.

தனது புதிய அவதாரம் குறித்து பூனம் கூறுகையில், இதை மேக்ஓவர் என்று கூற முடியாது. இதுபோன்ற ஒரு போட்டோஷூட்டுக்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன் என்பதே உண்மை. ஒரு நடிகையாக நான் என்னை அப்கிரேட் செய்து கொள்ள வேண்டியது அவசியம். புதிய தோற்றம் எனக்கேப் பிடித்துள்ளது.

மேலும் கவர்ச்சிகரமாகவும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க விரும்பினேன். அதற்காகத்தான் இந்த புதிய கோலம். இது கவர்ச்சிதானே தவிர ஆபாசமாக இருக்காது. அப்படி நான் நடிக்கவும் மாட்டேன் என்கிறார் பூனம்.

புதிய அவதாரத்துடன் புதுப் பட வாய்ப்புகளை பாய்ந்து பிடிக்கத் தயாராகி விட்டாரம் பூனம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X