நதியா போல .. பூர்ணா விருப்பம்!

பார்க்க பளிச்சென இருக்கும் பூர்ணா, தமிழில் தனது பாதிப்பை படிப்படியாக வலுவாக்கி வருகிறார். தற்போது பார்த்திபனுடன் வித்தகன் படத்தில் சகலகலா நடிப்பையும் வெளிக்காட்டி நடித்து வருகிறார் பூர்ணா.
இப்படத்தில் மற்ற அனைவரையும் விட பூர்ணாவுக்குத்தான் வசனம் ஜாஸ்தியாக வைத்துள்ளனராம். இதனால் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார் பூர்ணா.
கோலிவுட்டில் உங்க நேரம் வந்து விட்டது போல இருக்கே என்று பூர்ணாவிடம் கேட்டால், இப்படத்தில் நான் துப்பாக்கி ஏந்தியும் வருகிறேன். இதற்காக பயிற்சி செய்து வருகிறேன் என்கிறார்.
நதியா போல குறும்புத்தனத்துடன் கூடிய கேரக்டர்களாக செய்ய வேண்டும் என்பது இவரது ஆசையாம்.
தமிழ் சினிமாவில் கேரள நடிகைகள் நிறையப் பேர் இருப்பது குறித்து அவரிடம் கேட்டால், தமிழ் ரசிகர்களுக்கு கேரள நடிகைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்கிறார். ஆனால் கேரளாவிலோ, அத்தனை பேரும் தமிழுக்குப் போய் விட்டார்களே என்று எல்லோரும் கவலைப்படுகிறார்களாம்.
தன்னைப் பார்ப்பவர்களிடம் பூர்ணா மகிழ்ச்சியுடன் சொல்லும் விஷயம், என்னைப் பார்க்கும் பலரும், ரேவதி போலவே இருக்கீங்களே என்று கேட்கிறார்களாம். சிலர் ஒரு படி மேலே போய், ரேவதியின் மகளா என்று கூட கேட்கிறார்களாம்.
முதலில் ஆசின் போல இருக்கிறார் என்று விஜய் பேசி வைத்தார். இப்போது ரேவதியின் 'மகளா'!!


Click it and Unblock the Notifications











