ராஜாவுடன் காதலா?- பிரியாமணி

பருத்தி வீரனுக்குப் பிறகு பிரியாமணி ரொம்பவே மாறி விட்டார். அதற்கு முன்பு அவரைப் பற்றிய செய்திகள் வருவதே அரிதாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் வதந்திகள் மயமாக மாறியிருக்கிறது பிரியாமணியின் நிலை.
அவருடன் நட்பு, இவருடன் காதல் என பிரியாவைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள். அதிலும், தெலுங்கு ஹீரோ ராஜாவுடன், பிரியா மணியை இணைத்து படு சூடாக செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளன. இருவருக்கும் காதல், மிக நெருக்கமாக பழகுகிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.
இருவரும் இணைந்து டாஸ் என்ற படத்தில் நடித்தனர். அப்போது முதல் நெருங்கிப் பழகி வருகிறார்கள். சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு, ஒரே காரில் வந்து, ஒன்றாக உட்கார்ந்து (ஆளுக்கு ஒரு சீட்டில்தான்), ஆற அமர சாப்பிட்டு விட்டுச் சென்றனர்.
என்னதான் நடக்குது, ராஜாவின் மனதில் நீங்கள்தான் இருக்கிறீர்களா, உங்கள் மனதில் யார் இருக்கிறார் என்று பிரியா மணியிடம் கேட்டால்,
டாஸ் படத்தில் ராஜாவுடன் நடித்தேன். அவர் மிகவும் இனிமையானவர். ஹைதராபாத் வந்தால் அவரை சந்திப்பது வழக்கம். ஹோட்டலிலோ அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டிலோ சந்திக்காமல் போக மாட்டேன்.
அவர் பேசிக் கொண்டிருந்தால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு சுவாரஸ்யமாக பேசுவார். இருவரும் நன்றாகப் பழகி வருகிறோம். ஆனால் இது நிச்சயம் காதல் இல்லை.
இருவரும் சேர்ந்து வந்து சாப்பிட்டால் அதை காதல் என்று கூறுவது சரியல்ல. ஒரு நண்பருடன் சாப்பிட போகக் கூடாதா? தப்பா? என்று பொறுமித் தள்ளி விட்டார் பிரியா மணி.
நம்புறோம்.


Click it and Unblock the Notifications











