'பார்த்ததும் பச்சக்குன்னு முத்தம் தரத் தூண்டும் ப்ரியங்கா உதடுகள்!'

இதில் அமோக ஓட்டுக்களுன் வென்றவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா!
பொதுவாக பெண்களின் அழகுக்காக பெண்கள் பத்திரிகைகள் அல்லது பெண்கள் அமைப்புகள்தான் போட்டிகளை நடத்தும்.
ஆனால் 'பான்ட்டஸி' என்ற ஆண்களுக்கான இதழ் ஒன்று நடிகைகளின் அழகுத்தோற்றம் தொடர்பாக வித்தியாசமான கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்திய நடிகைகளில் முத்தமிடுவதற்கு ஆர்வத்தை தூண்டும் அளவுக்கு கவர்ச்சியான, அசத்தலான தோற்றம் கொண்டவர் யார் என்பதே அந்த கணக்கெடுப்பு.
இதில் பிரபல இந்தி நடிகையான 28 வயது பிரியங்கா சோப்ரா அதிக வாக்குகளுடன் வென்றுள்ளார்.
"அவருடைய உதடுகள் அத்தனை அழகாக உள்ளன, அவற்றைப் பார்த்த உடனேயே முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டுகின்றன," என்று பெரும்பாலான ஆண்கள் கருத்து கூறி உள்ளனர்.
ஐஸ்வர்யா ராய் 2-வது இடத்தையும், கரீனா கபூர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நடிகை பிபாஷா பாசு 4-வது இடத்திலும், கத்ரினா கைப் 5-வது இடத்திலும், சோனம் கபூர் 6-வது இடத்திலும், மல்லிகா ஷெராவத் 7-வது இடத்திலும் உள்ளனர்.
தீபிகா படுகோனே, ஜெனிலியா டிசோசா முறையே 8வது மற்றும் 9வது இடம் பெற்றுள்ளனர்.
நம்ம ஊரு அசினுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











