சிம்பு.. சிலிர்க்கும் சானா!

மும்பையிலிருந்து வந்த ஜில் வரவுதான் சானா கான். சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் இணைந்து கலக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே டான்ஸில் பின்னி எடுத்திருக்கிறாராம்.
குறிப்பாக ஹை ஹீல்ஸ் செருப்பைப் போட்டுக் கொண்டு டான்ஸில் அவர் காட்டிய வேகத்தைப் பார்த்து சக டான்ஸர்களும், டான்ஸ் மாஸ்டர்களும் அரண்டு போய் விட்டார்களும்.
தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நாயகியும் இப்படி ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டு ஆடத் துணிந்ததில்லை என்று சானாவைப் பாராட்டித் தள்ளி விட்டனராம்.
ஆனால் சானாவோ சிம்புவைப் பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார். சிம்பு மாதிரி ஒரு ஆளை பார்த்ததே இல்லை. டான்ஸிலும் சரி, ஆக்ஷனிலும் சரி அவருக்கு நிகர் அவரேதான். புயல் வேகத்தில் இருக்கிறார் என்கிறார் பிரமிப்பு மாறாமல்.
எனக்கு தமிழ் சினிமா குறித்து அதிகம் தெரியாது. ஆனால் சிம்பு பற்றி எனக்கு நன்கு தெரியும். சிம்பு - நயனதாரா விவகாரம் குறித்து மும்பை பத்திரிக்கைகள் நிறைய செய்திகள் வெளியிட்டிருந்ததால் சிம்பு குறித்து எனக்கு முன்பே தெரியும்.
ஆனால் சிலம்பாட்டம் படத்தில் நடிக்க ஆரம்பித்த பின்னர்தான் சிம்புவை முழுமையாக புரிந்து கொண்டேன். படத்தில் சிம்பு உண்மையிலேயே கலக்கியிருக்கிறார்.
அவருக்குப் போட்டி போட்டு நானும் செய்துள்ளேன். அவரது சவால்களை சமாளிக்கவே எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது என்கிறார் சானா.
21 வயதாகும் சானாவை, மும்பைக்குப் போனபோது டிவி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து விட்டு ஸ்பாட் செலக்ஷன் செய்தாராம் சிம்பு.
சிலம்பாட்டத்தை முடித்து விட்ட சானா, படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். தொடர்ந்து தமிழில் கலக்கும் எண்ணம் இருப்பதாகவும் புன்னகைக்கிறார்.


Click it and Unblock the Notifications











