நடிப்பு கஷ்டம்!-கவர்ச்சி ஈஸி!!-ஷெரில்

விஜயகாந்துடன் அரசாங்கம் படத்தில் அறிமுகமானவர் ஷெரில் பிண்டோ. கனடா நாட்டுப் போலீசாக வந்து, டொரண்டோ தெருக்களில் கேப்டனுடன் குத்தாட்டம் போட்டவர்.
இப்போது மீண்டும் விஜயகாந்துடன் எங்கள் ஆசான் படத்தில் நடித்து வருகிறார். முதல் படத்தில் கிளாமரில் அசத்தியவருக்கு, இரண்டாவது படத்தில் கிளாமருடன் நடிக்கவும் வேண்டியுள்ளதாம்.
"இதுதான் எனக்கு ரொம்ப கஷ்டம். குறைந்த உடை, எக்கச்சக்க கவர்ச்சி, லிப் டு லிப் முத்தக் காட்சி எதுவானாலும் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிப்பைக் காட்டச் சொன்னால் எனக்கு அதைவிடக் கஷ்டம் வேறில்லை!
நான் கிளாமரான உடல்வாகு கொண்டவள். அதனால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகமாக இருக்கிறது.
ஆனால் எங்கள் ஆசான் படங்களில் அடக்கமான பெண்ணாக நடிக்கிறேன். வேறு வழியில்லை.
ஆனால் வாடா படத்தில் கலக்கல் கிளாமர் வேடம். கொஞ்சம் காமெடியும் உண்டு. விவேக் நடத்தும் டிராவல்ஸ் கம்பெனியின் கட்டிட உரிமையாளராக நடித்துள்ளேன்.
டிராவல்ஸ் நடத்தும் விவேக்கை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என்று சுந்தர்.சியிடம் உதவி கேட்க, அதுவே காதலாக மாறும். ஒருதலையாக என்னைக் காதலிக்கும் விவேக், எனக்கு பல இடையூறுகள் தருவார். இப்படி ஒரு கலக்கலான கேரக்டர்.
படம் முழுக்க மாடர்ன் டிரஸ்தான். படத்தில் ஒரு முத்தக் காட்சியோ, நீச்சல் உடையோ கொடுங்கள் என்று இயக்குனரை கேட்டிருக்கிறேன். தந்தால் சந்தோஷம். கிளாமர் என்பது இன்றைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது என்கிறார் ஷெரில்.


Click it and Unblock the Notifications











