ஸ்ரேயாவின் 'செக்' ஷாக்!

பொல்லாதவன் தயாரிப்பாளர் கதிரேசன் மீண்டும் தனுஷை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தார். இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்திருந்தார்.
இந்தப் படத்துக்காக கணிசமான தொகை அட்வான்ஸாகத் தரப்பட்டது ஸ்ரேயாவுக்கு.
ஆனால் ஸ்ரேயா கொடுத்த தேதிகளில் தயாரிப்பாளரால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.
காரணம், வழக்கம்போல தனுஷ்!
அடுத்தடுத்த படங்களில் நடிக்க அட்வான்ஸை வாங்கிக் குவித்துவிட்ட தனுஷால், இந்தப் படத்துக்கு உடனடியாக திரும்ப முடியவில்லை. இதுகுறித்து சமீபத்தில் தயாரிப்பாளர் கவுன்சிலில் ஒரு ரகசிய பஞ்சாயத்து நடந்து முடிந்தது.
அதில், ஏற்கெனவே தனுஷ் ஒப்புக் கொண்ட இரு படங்களை நடித்துக் கொடுத்த பிறகே கதிரேசனின் படத்தில் நடிக்க வேண்டும் என கவுன்சில் நிபந்தனை விதிக்க, அதை தனுஷும் ஒப்புக் கொண்டார்.
ஆனால் ஸ்ரேயாவால் அதுவரை காத்திருக்க முடியாது. காரணம் ஏற்கெனவே இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் அவர் ஒப்புக் கொண்ட 5 படங்களை முடித்துக் கொடுத்தாக வேண்டும்.
எனவே வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிடுவதாகக் கூறி தயாரிப்பாளரை வந்து வாங்கிக் கொள்ளச் சொன்னாராம். ஆனால் அவரோ இதோ அதோ என இழுத்தடிக்க, அட்வான்ஸ் தொகைக்கான காசோலையையும், ஒரு விளக்கக் கடிதத்தையும் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார் ஸ்ரேயா.
இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு நடிகையா என வியந்து போனாராம் நடிகர் சங்க செயலாளர் ராதா ரவி.


Click it and Unblock the Notifications











