சில்மிஷ ரசிகர்-'அப்பிய' ஷ்ரியா

By Staff

Shreya
கோவிலுக்கு வந்த இடத்தில் இடுப்பைப் பிடித்துக் கிள்ளிய ரசிகரின் கன்னத்தை பதம் பார்த்தார் நடிகை ஷ்ரியா.

சிவாஜி நாயகி ஷ்ரியா, உகாதியையொட்டி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சுப்ரபாத தரிசன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருடன் திருப்பதி எம்.எல்.ஏ வெங்கட்ரமணா என்பவரின் உதவியாளர் கோட்டி என்பவர் துணைக்கு வந்திருந்தார்.

தரிசனத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஷ்ரியா. அதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென ஷ்ரியாவை பார்த்த ரசிகர்கள் ஷ்ரியாவை சுற்றிச் சூழ்ந்தனர்.

ஆளுக்கு ஒரு பக்கமாக பாய்ந்து ஷ்ரியாவைத் தொட்டும், தடவியும் பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் ஹரி என்பவர் சற்று அத்துமீறி, ஷ்ரியாவின் இடுப்பைப் பிடித்துக் கிள்ளி விட்டார்.

கடும் கோபமடைந்த ஷ்ரியா, அந்த நபரின் கன்னத்தில் விட்டார் ஒரு பளார். பின்னர் கோட்டியும், அந்த ரசிகரைப் பிடித்து சரமாரியாக போட்டார்.

பிறகு ஷ்ரியா வேகமாக அங்கிருந்து கிளம்பி காரில் பறந்து விட்டார். கோவிலில் இப்படி நடந்து கொண்டது எனக்கு மிகுந்த வேதனையையும், கோபத்தையும் கொடுத்து விட்டது. அதனால்தான் அந்த நபரை அடித்தேன் என்று கூறியுள்ளார் ஷ்ரியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X