லிப் டு லிப் நிஜம்தான்! - ஸ்ரேயா

இதுகுறித்து ஸ்ரேயாவைக் கேட்டபோது அவர் இப்படி பதில் சொன்னார்.
முத்தக் காட்சிகளுக்கு நான் எதிரி இல்லை. படத்தில் அப்படி ஒரு காட்சியிருந்தது. நடித்தேன். திரையில்தான் நான் ஹாட். நிஜத்தில் பாரம்பரியமான சாதுப் பெண் நான். இம்ரானுக்கு படத்தில் கொடுத்த முத்தத்தை நிஜத்தில் முயற்சி பண்ணிப் பார்க்கலாம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்!
இந்திப் படங்களில் மிகக் கவர்ச்சியாக நடிக்கிறீர்களாமே...
கவர்ச்சிக்கு அளவுகோல் கிடையாது. சிவாஜியிலேயே நான் கவர்ச்சியாகத் தோன்றியதாகத்தான் சொன்னார்கள். இன்னொரு பக்கம், என்னோட உடல்வாகுக்கு பிகினிதான் நல்லாருக்குன்னு என் ரசிகர்கள் சொல்றாங்க. அதனாலதான் மேக்ஸிம் பத்திரிகைக்கு மேக்ஸிமம் கவர்ச்சியோட போஸ் கொடுத்தேன். பாராட்டு குவிஞ்சிடுச்சி, என்கிறார் ஸ்ரேயா.
அப்ப இனி படங்களிலும் பிகினி தரிசனம் உண்டா...
ஏன் இல்லாம... டைரக்டர்கள் சொன்னால் நிச்சயம் நீச்சல் உடையில் தோன்றுவேன். வரப் போகிற கந்தசாமியில்கூட அப்படியொரு காட்சி இருக்கு, எனும் ஸ்ரேயாவுக்கு ரோபோவில் வாய்ப்புக் கிடைக்காதது பெரும் வருத்தமாம்.
ரஜினி சார் கூட திரும்பவும் இணையும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவருடன் நடித்த போது, என்னைவிட இருமடங்கு வயதுள்ள ஹீரோவுடன் நடிக்கும் உணர்வே எனக்கு இல்லை. அத்தனை இளமையுடன் அசத்தினார் ரஜினி, என ரஜினி புகழ் பாடுகிறார் நயன்தாராவுக்குப் போட்டியாக.
சரி, மர்மயோகியில் நடிப்பது உறுதியாகிவிட்டதா...
அதுபத்தி இப்போது எதையும் சொல்ல முடியாத நிலையிலிருக்கேன். கமல் சார் பேசியிருக்கார். இன்னும் சில தினங்கள் கழித்து எல்லாம் நல்லபடியாக முடிந்ததும் தகவல் சொல்கிறேன்.
நல்லபடியா 'முடியட்டும்'...!


Click it and Unblock the Notifications











