'காஸ்ட்லி' சிம்ரன்!

சின்னத் திரையில் அறிமுகமாகி பின்னர் இந்திப் படத்தின் மூலம் பெரிய திரைக்கு வந்து அப்படியே தமிழுக்கு டிரான்ஸ்பர் ஆகி, தமிழ் ரசிகர்களின் ட்ரீம் கேர்ள் ஆக உலா வந்தவர் சிம்ரன்.
பின்னர் கல்யாணம் செய்து கொண்டு அழகான ஒரு குழந்தையையும் பெற்ற பின்னர் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வந்த சிம்ரன், மறுபடியும் படங்களில் நடிக்க ஆர்வமாக இருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல வாய்ப்புகள்தான் வரவில்லை.
இந்த நிலையில் முன்பை விட பொலிவாக மாறியுள்ள சிம்ரன், சின்னத் திரைகளுக்கு ஷிப்ட் ஆகியுள்ளார். ஒரே நேரத்தில் சன் டிவி மற்றும் ஜெயா டிவிகள் மூலம் தமிழ்க் குடும்பங்களை கலகலக்க வைக்கிறார் சிம்ரன்.
சின்னத்திரைக்கு வந்ததால் அவரது சம்பளத்தில் எந்தக் குறைச்சலும் இல்லையாம். செமத்தியான சம்பளத்துடன்தான் அவர் டிவிக்கு வந்துள்ளாராம்.
தற்போது சிம்ரனின் சம்பளம் ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூ. 2 லட்சமாம். அது டிவியாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, இரண்டுக்குமே ஒரே ரேட்தானாம்.
இந்த சம்பளத்தில் அவர் சற்றும் இளக்கம் காட்டுவதில்லையாம். பேரமே பேசப்படாது என்ற கண்டிஷனுடன்தான் நடிக்க ஒத்துக் கொள்கிறாம்.
இந்த 2 லட்சம் என்பது சம்பளம். இதுதவிர அவரது பிற செலவுகளையும் தயாரிப்பாளர்கள்தான் சுமக்க வேண்டுமாம். இந்தப் படி, அந்தப் படி என்று ஒரு நாளைக்கு ரூ. 40 ஆயிரம் வரை கறந்து விடுகிறாராம் சிம்ரன்.
கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக அவர் பணியாற்றியபோது ஒரு எபிசோடுக்கு ரூ. 2 லட்சம் வாங்கினாராம். பின்னர் திடீரென ரூ. 3.5 லட்சமாக தனது சம்பளத்தை உயர்த்தியதால் கடுப்பான நிகச்சி தயாரிப்பாளரான கலா மாஸ்டர் சிம்ரனை தூக்கி விட்டு அந்த இடத்திற்கு நமீதாவைக் கொண்டு வந்தார்.
தற்போது கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்திலும் இதே சம்பளத்தின் அடிப்படையில்தான் நடித்துக் கொடுக்கிறாராம் சிம்ரன். இப்படத்திற்காக 15 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் சிம்ரன். இதில் சூர்யாவின் அம்மாவாக, அதாவது அப்பா சூர்யா கேரக்டருக்கு ஜோடியாக நடிக்கிறாராம் சிம்ரன்.
சிலிர்க்க வைத்த சிம்ரன் இப்போது நடுங்க வைக்கிறாரே!


Click it and Unblock the Notifications











