ஸ்னேகாவுக்கு இனி அச்சமில்லை...அச்சமில்லை!

பிரசன்னாவின் வில்லங்கமில்லாத இந்த கெமிஸ்ட்ரி ஸ்னேகாவுக்குப் பிடித்துப் போக 'அச்சமில்லை அச்சமில்லை' என அடுத்த படத்துக்கும் தானே வலியப் போய் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
மூன்று நாயகர்களில் ஒருவராக பிரசன்னா நடிக்கும் காதலிக்க நேரமில்லை ரீமேக்கில், ஸ்னேகாதான் அவருக்கு ஜோடி.
ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லையில் ரவிச்சந்திரன் நடித்த வேடத்தில் பிரசன்னா நடிக்கிறார். அதே விஸ்வநாதன் வேலை வேணும்... பாடலை ரீமிக்ஸ் செய்யத் தயாராகிவிட்டார் யுவன் ஷங்கர் ராஜா.
பழைய படத்தில் நாகேஷ் ஏற்ற வேடத்தை வடிவேலுவும், முத்துராமன் வேடத்துக்கு பசுபதியும், டிஎஸ் பாலையா வாழ்ந்த அந்த முக்கியமான வேடத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியமும் நடிக்கவிருக்கின்றனர்.
மனோபாலா தயாரிக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் கே.செல்வபாரதி.
Comments


Click it and Unblock the Notifications