சுஜா டூ சுஜாதா!

குத்துப்பாட்டுக்களில் தனக்கென தனி ஸ்டைலுடன், புது அழகுடன் அசர வைத்தவர் சுஜா. ஆரம்பத்திலிருந்தே குத்துப் பாட்டுக்களுக்கு மட்டுமே ஆடி வந்ததால் குத்தாட்ட ஸ்பெஷலிஸ்ட்டாக அவரை கோலிவுட் பார்த்தது.
தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களிலும் சுஜாவின் குத்தாட்டம் கோலாகலமாக தொடர்ந்தது. இப்படியே ஏகப்பட்ட படங்களில் ஆடி சாதனை படைத்தார் சுஜா.
குத்தாட்டத்தில் தனி ஆவர்த்தனம் செய்து வந்தாலும், தனி நாயகியாக நடிக்க வேண்டும் என்ற லட்சிய தாகத்துடன் வலம் வந்தார் சுஜா. ஆனால் அவரது தாகத்தை தீர்க்கத்தான் ஆள் இல்லை.
இருந்தாலும் விடாமல் தனி நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டுதான் உள்ளார் சுஜா. இந்த நிலையில்தான் உங்களது பெயர்தான் சரியில்லை. அதை மாற்றிக் கொண்டால் லட்சியம் நிறைவேறும் என்று கோலிவுட் ஜோதிடர் ஒருவர் கூறவே அதை தீவிரமாக பரிசீலித்து இப்போது தனது பெயரை சுஜாதா என மாற்றி விட்டார்.
இனிமேல் தனது பெயரை சுஜாதா என்றே அழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளாராம் சுஜா. இனிமேலாவது தனி நாயகி வாய்ப்பு வருமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளார் சுஜா.


Click it and Unblock the Notifications











