ஷ்ரியாவுக்கு அம்மா தபு?

ரஜினி நடிப்பதாக இருந்து கடைசியில் கைவிடப்பட்ட படம் ஜக்குபாய். இதையடுத்து தற்போது சரத்குமாருக்காக இப்படத்தை எடுக்கவுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.
இதில் சரத்குமாருக்கு இரட்டை வேடம். அப்பா, மகன் வேடங்களில் நடிக்கவுள்ளார் சரத். மகன் சரத்தின் ஜோடியாக வருகிறார் ஷ்ரியா. அப்பா சரத்தின் ஜோடியாக முதலில் புக் ஆனவர் சினேகா. ஆனால் ஷ்ரியாவுக்கு அம்மாவாக நடிக்க முடியாது என்று கூறி கழன்றுகொண்டு விட்டார் சினேகா.
இதையடுத்து அப்பா சரத்துக்கு ஜோடி தேடிக் கொண்டிருக்கின்றனர். சிம்ரன், விமலா ராமன், பத்மப்ரியா என பலரையும் அணுகினர். ஆனால் யாரும் சிக்கவில்லை.
இதையடுத்து தபுவைக் கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். சரத்குமாரே நேரடியாக சென்று தபுவிடம் பேசினார். தபுவும் நடிக்க ஒத்துக் கொண்டார். ஆனால் ரூ. 75 லட்சம் சம்பளம் தர வேண்டும் என்று டிமாண்ட் செய்கிறாராம். அம்மா கேரக்டருக்கு முக்கால் கோடியா இன்று தற்போது சரத்குமாரும், கே.எஸ்.ரவிக்குமாரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
படத்தில் இந்தக் கேரக்டர், கிட்டத்தட்ட சரத்குமாருக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்கிறார் ரவிக்குமார். எனவே தபுவுக்கு அள்ளிக் கொடுத்து 'அம்மா' ஆக்குவார்களா என்று கோலிவுட்டே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











