பெண்களை முன்னேற விடுங்க! - நடிகைகள் ஆவேசம்

By Shankar

இன்று உலக மகளிர் தினம்... விவிஐபி மற்றும் விஐபி பெண்களெல்லாம் கருத்து சொல்லும் நாள்.

அந்த வகையில் நடிகைகள் என்ன சொல்கிறார்கள்? பார்ப்போமா...

இலியானா: பெண்கள் மென்மையானவர்கள் என்று சொல்லி ஆண்கள் அடக்கி வைத்துள்ளனர். அதிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். தேவை வரும்போது பெண்களும் கடுமையானவர்களாக மாற வேண்டும். இன்னொன்று, பயம், நடுக்கத்தையெல்லாம் விட வேண்டும். படிக்காதவர்களுக்குதான் பயம் வரும். எனவே பெண்கள் எல்லோரும் படிக்க வேண்டும். படிப்பு பெரிய ஆயுதம்!

சினேகா: பெண்களால் சாதிக்க முடியாத துறை என்று எதுவும் இல்லை. எல்லாவற்றிலும் அவர்கள் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர். அதே நேரம் முன்பிருந்த நிலை இப்போது இல்லை பெண்கள் விஷயத்தில். 33 சதவீத ஒதுக்கீடு உள்ளிட்ட சில விஷயங்களை உடனே நடைமுறைப்படுத்தணும்.

நீது சந்திரா: பெண்களை முன்னேற விடாமல் தடுக்கிறார்களே என்ற வேதனையை மறைக்க முடியவில்லை என்னால். நான் தமிழில் இப்போது ஆதிபகவான் படத்தில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்புக்காக பீகார் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மார் கிராமத்துக்கு சென்றேன். ஆண்கள், குழந்தைகள் நிறைய பேர் வந்து ஆட்டோ கிராப் வாங்கினர்.ஒரு பெண்ணை கூட காணவில்லை.

காரணம் கேட்டேன். எங்கள் ஊரில் பெண்கள் வீட்டு வாசலைத் தாண்டி வெளியே வர மாட்டார்கள். திருவிழா நடக்கும் போது மட்டும் சாமி கும்பிட வருவார்கள் என்றனர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நானும் பீகாரை சேர்ந்தவள்தான்.

வீடு வீடாக சென்று பெண்களை சந்தித்து என்னைப் போல் சுதந்திரமாக வெளியே வாருங்கள் என்றேன். சிரித்துக் கொண்டு உள்ளே ஓடி விட்டனர். அவர்களுக்கு கல்வி அறிவு ஊட்ட வேண்டும். சமூக சேவை அமைப்புகளை அழைத்து போய் அப்பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த செய்துள்ளேன். 33 சதவீத பெண்கள் மசோதாவை அமல்படுத்தினால் நிலைமை உயரும்.

ஹன்சிகா மோட்வானி: சினிமாவுக்கு வரும்முன் பெற்றோரை சார்ந்து இருந்தேன். சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு சொந்தக் காலில் நிற்கிறேன். முடிவுகளையும் நானே எடுக்கிறேன். பெண்கள் சுயமாக சம்பாதித்தால்தான் சுதந்திரமாக வாழ முடியும். ஆண்கள் சம்பாத்தியத்தை நம்பி இருந்தால் அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்.

திருமணத்துக்கு முன் பெற்றோர் பின்னாலும் திருமணமானதும் கணவர் பின்னாலும் ஒளிகிற நிலைமைதான் பெண்களுக்கு இருக்கிறது. அந்த நிலைமை மாறனும்னா பெண்கள் படிக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும். 33 சதவீத பெண்கள் மசோதாவை நிறைவேற்றினால் இன்னும் முன்னேற்றம் கிடைக்கும்.

அனுஷ்கா: பெண்களை அடக்கி ஒடுக்கி, வீட்டுக்குள் முடக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த சமூகம் முற்றாக விட வேண்டும். பெண்களை கவுரவமாக நடத்த வேண்டும்.

ஸ்ரேயா: எங்கோவது பெண்களுக்கு அநியாயம் நடந்தால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.

பெண்கள் சமுதாயத்தில் முன்னேற 33 சதவீத இட ஒதுக்கீடு அவசியம். அந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் பெண்கள் வாழ்க்கை தரம் உயரும்.

ஸ்ஸ் அப்பா...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X