'ராணி' திரிஷா ... 'மகாராணி' ஷ்ரியா!

மர்மயோகி படத்தில் நாயகிகளாக நடிக்கின்றனர் திரிஷாவும், ஷ்ரியாவும். இவர்கள் தவிர ஹேமமாலினி, முமைத்கான், ஷோபனா என மேலும் 3 பேரும் இருக்கின்றனர். இதில் திரிஷாவுக்குத்தான் நடிப்பதற்கு செமத்தியான வாய்ப்பாம்.
சங்க காலத்து தமிழில் பேச வேண்டும் என்பதால் திரிஷாவுக்கு சிறப்பு தமிழ் பேச்சுப் பயிற்சிக்கு கமல் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதேபோன்ற சிறப்புப் பயிற்சி மற்றவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹீரோயின்கள் அனைவரும் சொந்தக்குரலில்தான் பேச வேண்டும் என்பது கமலின் அன்புக் கட்டளையாகும். இதனால் ஹீரோயின்கள் அனைவரும் தமிழ் பேச கற்றுக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் திரிஷாவுக்கும், ஷ்ரியாவுக்கும் போட்டோ செஷன் நடந்தது. அந்தக் காலத்து ராணிகள் அணிவதைப் போன்ற டிரஸ்ஸைப் போட்டு விதம் விதமான ஸ்டில்களை சுட்டுத் தள்ளினர்.
காஸ்ட்யூமை போட்டு கழட்டுவதற்கே நெடு நேரம் ஆனதாலும், வெயிட்டான அந்த உடைகளைப் போட்டுக் கொண்டதாலும் திரிஷாவும், ஷ்ரியாவும் டயர்ட் ஆகிப் போய் விட்டனராம்.
ஏசி அறையிலும் கூட வியர்த்து விறுவிறுத்து, தொப்பலாக நனைந்து போய் விட்டனராம். அந்தக் காலத்துப் பெண்மணிகள் எப்படித்தான் இப்படி உடை அணிந்தார்களோ என்று கமலிடம் ஆச்சரியத்துடன் கேட்டுள்ளனர் இருவரும்.
அதற்கு கமல், இதற்கே இப்படியென்றால் இன்னும் குதிரையேற்றம், வாள் சண்டை என ஏகப்பட்ட ஐட்டங்கள் இருக்கிறதே, எப்படி தாங்குவீர்கள் என்று கேட்டு அவர்களை பீதிக்குள்ளாக்கியுள்ளார்.
பின்னர் அவரே இருவரையும் ஆறுதல் படுத்தி, உங்களது நடிப்பு முத்திரைக்கு நல்ல வாய்ப்பு இது. எனவே இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்ப காலத்திற்குப் பேசப்படுவீர்கள் என்று தைரியம் கொடுத்துள்ளார்.
கமல் கொடுத்த அட்வைஸை சிரமேற்கொண்டு இப்போது அவர் சொன்ன பயிற்சிகளையெல்லாம் படு தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார்களாம் இருவரும்.
'யுவராணி' திரிஷா, 'யவன' ராணி ஷ்ரியா பராக், பராக், பராக்!


Click it and Unblock the Notifications











