சுந்தருக்கு இரண்டு 'இடி'!!

By Staff

Namitha with Sunder C
இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தான் தயாரித்து இயக்கவுள்ள 'இடி' படத்தில் அதிரடி வேடத்தில் நடித்துத் தருமாறு லேடி சூப்பர்ஸ்டார் விஜயசாந்தியிடம் கேட்டிருக்கிறாராம்.

சண்ட படம் தாறுமாறாக வசூலை அள்ளிக் குவிப்பதில் பெரும் உற்சாகத்தில் மிதக்கிறார் ஷக்தி. இதையடுத்து மறுபடியும் சுந்தர்.சி, நமீதாவை வைத்து அடுத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதன் பெயர்தான் இடி.

இப்படத்திலும் சுந்தர்.சியின் அதிரடியும், நமீதாவின் கவர்ச்சி வெடியும் களேபரமாக இருக்குமாம்.

இருந்தாலும், தனது படம் வெறும் கவர்ச்சிக் காமெடியாக மட்டும் இருப்பதை விரும்பாத ஷக்தி, அதிரடியாக ஒரு கேரக்டரை இப்படத்துக்காக உருவாக்கியிருக்கிறாராம். இதில் நடிக்க விஜயசாந்திதான் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை அணுகி கதை சொல்லி இருக்கிறார்.

நடிப்பிலிருந்து விலகி இப்போது தல்லி தெலுங்கானா எனும் பெயரில் அரசியல் கட்சி நடத்திவரும் விஜயசாந்தி இதில் நடிக்க இன்னும் தன் சம்மதத்தைத் தரவில்லையாம். ஆனாலும் தந்து விடுவார் என்ற நம்பிக்கையில், விஜயசாந்தியின் கேரக்டரை நீட்டிக் கொண்டிருக்கிறார் ஷக்தி.

ஒரு பக்கம் அடிதடி விஜயசாந்தி, இன்னொரு பக்கம் கவர்ச்சி இடி நமீதா. நடுவில் நாயகன் சுந்தர்.சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X