பிரஷாந்த்துக்கு தங்கச்சி ஸ்னேகா!!!!!

ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகைகள், பின்னர் அக்கா, தங்கச்சி கேரக்டர்களில் நடிப்பது புதிதல்ல. பாசமான அண்ணன், தங்கைக்கு இன்று வரை மேற்கோள் காட்டப்படும் படம் பாசமலர். அதில் சிவாஜி கணேசனும், சாவித்ரியும் அண்ணன், தங்கையாக வாழ்ந்து காட்டினர். ஆனால் ஜோடியாக நடித்த படங்களும் நிறைய உண்டு, அவையும் ஹிட் ஆகியுள்ளன.
அதேபோல சில வருடங்களுக்கு முன்பு விஜய்க்கு ஜோடியாக நடித்த கவுசல்யா ஒரு படத்தில் அவருக்கு அண்ணி வேடத்தில் வந்து போனார்.
இந்த வரிசையில் இப்போது பிரஷாந்த், சினேகா இணைகின்றனர். சினேகாவின் முதல் படத்தின் நாயகனே பிரஷாந்த்தான். விரும்புகிறேன் படத்தில் இருவரும் ஜோடி போட்டு நடித்தனர். பின்னர் ஆயுதம் படத்திலும் இணைந்தனர்.
இந்த நிலையில் தற்போது பொன்னர் சங்கர் படத்தில் பிரஷாந்த்தின் தங்கையாக நடிக்கவுள்ளார் சினேகா.
சமீபத்தில் மலையாளப் படத்தில் அனன்யாவுக்கு அம்மாவாக சினேகா நடிப்பதாக செய்திகள் வந்தபோது பரபரப்பாக அதை மறுத்தார் சினேகா என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











