கன்னட 'மைனா' ஆவாரா அமலா?
மைனா படம் மூலம் பெரும் புகழை எட்டிய அமலா பால், இப்போது கன்னடத்திலும் அதே படத்தின் ரீமேக்கில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழில் அமலா பால் நடித்த ஆரம்பக் கால படங்கள் அவருக்குப் பெரிய பெயரை வாங்கித் தரவில்லை. ஆனால் மைனா படத்தின் மூலம் அவர் பெரிய ஸ்டாராகி விட்டார்.
மைனா படத்தின் மூலம் விஸ்வரூப வளர்ச்சியை எட்டிப் பிடித்துள்ள அமலா பால், இப்போது விக்ரமுடன் ஜோடி போடுகிறார். மேலும், முன்னணி ஹீரோக்கள் சிலரும் அமலா பால் வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனராம்.
இதனால் குஷியாகியுள்ள அமலா, தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை சரியாக பரிசீலித்து ஒப்புக் கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில், மைனா விரைவில் இந்திக்குப் போகவுள்ளது. அதையும் பிரபு சாலமனே இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அதேசமயம், இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யவுள்ளனர். கன்னட நடிகர் கணேஷ் நடிக்கப் போகிறாராம்.
ஹீரோயினுக்கு ஆள் தேடி வருகிறார்கள். அமலா பாலையும் அணுகியுள்ளதாக தெரிகிறது. கன்னட முகமாக வேண்டும் என்று விரும்பினால் அமலா பால் நடிக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
ஆனால் தற்போது தமிழில் ஸ்திரமான நிலையை எட்டும் முயற்சியிலேயே அமலா தீவிரமாக இருப்பதால் கன்னடத்தில் நடிக்கப் போவாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











