நாடோடிகள் நாயகி அனன்யா நடிக்கும் சீடன்!

மலையாளத்தில் ப்ருத்விராஜ் நவ்யா நாயர் நடித்த நந்தனம் படத்தை தமிழில் சீடன் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். சுப்பிரமணியம் சிவா இயக்கும் இந்தப் படத்தில்தான் அனன்யா நாயகியாகிறார். ஒரிஜினல் படத்தில் நடித்த பிருத்விராஜே, இதிலும் நாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் விசேஷம், நடிகர் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதுதான். தனுஷ் போலவே இன்னும் சில பிரபல முகங்களும் படத்தில் தோன்றி சர்ப்ரைஸ் தரப்போகிறார்களாம்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராமிடம் அசிஸ்டண்ட்டாக இருந்து கேமரா பயிற்சி பெற்ற ஸ்ரீனி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தை இயக்க ஒப்புக் கொள்ளும் முன் சுப்ரமண்ய சிவாவுக்கு நிறைய ஹீரோ வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டாராம் சிவா. திரைக்குப் பின்னாலிருந்து ஆட்டுவிப்பதில் உள்ள த்ரில்லே தனி என்கிறார் மனிதர்.
Comments


Click it and Unblock the Notifications