சிஷ்யனுடன் ஆடும் அனுஷ்கா

தமிழ் மூலம் தெலுங்குக்குப் போனவர் அனுஷ்கா. தனது கவர்ச்சித் திறமையால் தெலுங்கில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இளம் நடிகர் நாக சைதன்யாவுடன் ஒரு படத்தில் குத்தாட்டம் போடவிருக்கிறார் அனுஷ்கா. நாக சைதன்யா வேறு யாருமல்ல, தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நாகார்ஜுனாவின் மகன்தான்.
தில்ராஜு தயாரிக்க, வாசு வர்மா இயக்கும் இப்படம் ஹைதராபாத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் படத்தில், நாக சைதன்யா கேட்டுக் கொண்டதற்காக ஒரு குத்தாட்டத்திற்கு ஆட சம்மதித்தார் அனுஷ்கா.
வேடிக்கை என்னவென்றால், நாக சைதன்யாவுக்கு முன்பு யோகா கற்றுக் கொடுத்தவர் அனுஷ்கா. நாக சைதன்யாதான், தனது தந்தை நாகார்ஜூனாவிடம் அனுஷ்காவை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதையடுத்தே சூப்பர் என்ற படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கில் அறிமுகமானார் அனுஷ்கா.
இப்போது சிஷ்யனுக்காக, அவருடன் இணைந்து குத்தாட்டம் ஆடவுள்ளார் அனுஷ்கா.


Click it and Unblock the Notifications











