மறுபடியும் பானு

நயனதாராவின் கால்ஷீட் கிடைக்காதால், தாமிரபரணிக்காக, நயன் சாயலி்ல் உள்ள பானுவைத் தேடிப் பிடித்து கேரளாவிலிருந்து கூட்டி வந்தார் இயக்குநர் ஹரி.
முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தார் பானு. தொப்பையை சற்றுக் குறைத்தால் தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என பலரும் அவருக்கு அட்வைஸ் செய்யவே அவரும் அதற்கேற்றார்போல தயாராகி வந்தார்.
இந்த நிலையில் திடீரென நான் படிக்கப் போகிறேன். இனி நடிக்க மாட்டேன் என கூறி வந்த வாய்ப்புகளையெல்லாம் உதறினார் பானு.
என்னாச்சு இவருக்கு என்று தமிழ் திரையுலகம் குழம்பிப் போனது. ஆனால் அப்பாவுக்கும், பானுவுக்கும் இடையிலான பிரச்சினைதான் அவரது நடிப்பு மறுப்புக்குக் காரணம் என பின்னர் தெரிய வந்தது.
இவர்களது கலாட்டா போலீஸ் வரைக்கும் போகவே இனிமேல் பானு நடிக்கவே மாட்டார் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.
ஆனால் பானு மறுபடியும் தமிழ்ப் படங்களில் நடிக்க வந்துள்ளார். தற்போது அழகர் மலை படத்தில் நடித்து வரும் பானு அடுத்து சரத்குமாருடன் இணையப் போகிறாராம்.
அழகர் மலையில் பானுவுக்கு ஜோடி போடுபவர் எல்லாம் அவன் செயல் பட நாயகன் ஆர்.கே. சரத்குமார் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. விரைவில் விரிவான தகவல்களை வெளியிடவுள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











