மலையாளத்தில் 2 படத்தில் நடிக்கும் தேவயானி

By Staff

Devayani
தமிழில் டிவி சீரியலில் பிசியாக இருந்து வந்த தேவயானி இப்போது மீண்டும் பெரிய திரை பக்கம் தீவிர கவனத்தைத் திருப்பியுள்ளார்.

அடக்கம், ஒடுக்கமாக நடித்தாலும் பிசியாக இருக்க முடியும் என்பதை நிரூபித்த சில நடிகைகளில் ஒருவர் தேவயானி. கவர்ச்சி காட்டாமலேயே நடித்து வந்த அவர் பீக்கில் இருந்தபோதே இயக்குநர் ராஜகுமாரனை காதல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானார்.

அதன் பின்னர் டிவி பக்கம் திரும்பினார். சன் டிவியில் வெளியான கோலங்கள் தொடரில் அவர் நடித்த விதம் அனைத்துப் பெண்களையும் கவர்ந்து இழுத்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பெரிய திரைக்குத் திரும்பியுள்ளர் தேவயானி. ஆனால் மலையாளத்தில்தான் அவர் நடிக்க போகிறார்.

மோகன்லால் - சமீரா ஜோடி இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்றில் தேவயானி நடிக்கிறார். இதில் 2வது நாயகனாக நடிக்கும் சீனிவாசனுக்கு ஜோடியாக வருகிறாராம் தேவயானி.

அதேபோல முகேஷ் நடிக்கும் படத்தில் புக் ஆகியுள்ள தேவயானி அதில் அவருக்க ஜோடி போடுகிறார்.

இந்த வேலைகளோடு கணவரை வைத்து உருவாக்கி வரும் தமிழ்ப் படத்திலும் ஒரு கண் வைத்தபடி அதையும் வேகமாக வளர்த்து வருகிறாராம் தேவயானி.

தனக்குப் பிடித்த கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறுகிறார் தேவயானி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X