ரயில் டாய்லெட்டுக்குள் சிக்கித் தவித்த நடிகை குல் பனாக்

மீண்டும் கதவைத் திறக்க முயன்றபோது கதவு திறக்கவில்லை. இதனால் பீதியடைந்தார் குல் பனாக்.
கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் போராடி அந்தக் கதவைத் திறந்தாராம் குல் பனாக். துருப் பிடித்துப் போயிருந்ததால் கதவு இறுக்கமாக மூடிக் கொண்டதை பிறகு உணர்ந்தாராம் குல் பனாக்.
இதுகுறித்து ட்விட்டர் மூலம் அவர் அனுப்பியுள்ள செய்தியில், சதாப்தி ரயிலில் டாய்லெட்டுக்குள் சிக்கிக் கொண்டு விட்டேன். மிகவும் கவலையாகி விட்டது. இருப்பினும் போராடி திறந்து வந்து விட்டேன்.
டாய்லெட்டுக்குள் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் சிக்கியிருந்தேன். கேட்பவர்களுக்கு இது வேடிக்கையாக இருக்கும். ஆனால் எனக்கு பெரும் கவலையாகி விட்டது என்று கூறியுள்ளார் பனாக்.
Comments


Click it and Unblock the Notifications