கல்லா கட்ட விரும்பாத ஹரிப்ரியா

By Sudha

Actress Haripriya
கைக்கு கிடைக்கும் படத்தையெல்லாம் வாங்கிப் போட்டு பணம் சம்பாதிக்கும் ஆசை எனக்கு இல்லை என்கிறார் நடிகை ஹரிப்ரியா.

கன்னடத்தில் நடித்து நடிகையானவர் ஹரிப்ரியா. அதன் பின்னர் வல்லக்கோட்டை படத்தில் அர்ஜூனுடன் நடித்து தமிழிலும் அறிமுகமானார்.

இப்போது சேரனுடன் தனது மூன்றாவது தமிழ்ப் படமாக முரண் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு நடிப்புக்கு நிறைய வேலை உள்ளதாம். இதனால் விரும்பி நடித்து வருகிறாராம்.

தற்போது அவரது கையில் தெலுங்குப் படம் ஒன்று இருக்கிறதாம். கன்னடத்தில் ஒரு படம் கூட இல்லையாம். தமிழில் நிறையப் படங்கள் வந்தாலும் கதைப் பிடிப்பான படங்களில் நடிக்கவே விரும்புகிறாராம். இதனால் வருகிற வாய்ப்புகளை வடிகட்டிப் பார்த்த பிறகே ஒப்புக் கொள்ள முடிவு செய்துள்ளாராம்.

இதுகுறித்து ஹரிப்ரியா கூறுகையில், வருகிற படங்களையெல்லாம் ஒப்புக் கொண்டு நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. சதைப் பிடிப்பான படங்களை விட கதையம்சம் உள்ள படங்கள்தான் நாளைக்கும் நம்மை அனைவரும் நினைத்துப் பார்க்க உதவும். எனவே நடிக்க வாய்ப்பு உள்ள படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறேன்.

ஒரு வேளை நடிக்க வாய்ப்பு உள்ள கேரக்டர்களே கிடைக்காவிட்டால் கவலையே பட மாட்டேன். நடிப்புக்கே குட்பை சொல்லி விடுவேன் என்று கூறி அதிர வைக்கிறார் ஹரிப்ரியா.

நடிப்புக்கு இப்படி முக்கியத்துவம் கொடுப்பதால் கவர்ச்சிக்கு எதிரானவரா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை, நடிப்புதான் முக்கியம், கவர்ச்சி பிறகுதான் என்கிறார் ஹரிப்ரியா.

ரொம்ப வித்தியாசமானவராக இருக்கிறாரே...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X