கன்னடத்தில் நமீதாவுக்கு கிராக்கி

தெலுங்கில் அறிமுகமாகி தனது கவர்ச்சியால் ரசிகர்களை கொள்ளை கொண்ட நமீதா, தமிழுக்கு வந்த பின்னர்தான் விஸ்வரூபம் எடுத்தார். இதுவரை யாரும் செய்திராத அளவுக்கு கிளாமர் புரட்சியை நடத்திய நமீதாவுக்கு கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள்.
எத்தனையோ ஹீரோயின்கள் தமிழ் திரையுலகை கலக்கிக் கொண்டிருந்தாலும், தன் பாதையில் தடபுடலாக நடை போட்டுக் கொண்டிருக்கிறார் நமீதா.
இந்த நிலையில் முதன் முதலாக கன்னடத்தில் ரவிச்சந்திரனுடன் இணைந்து நடித்தார் நமீதா. அந்தப் படத்தில் வரலாறு காணாத அளவுக்கு அவர் காட்டிய கிளாமர் கன்னட ரசிகர்களை, கதி கலங்க வைத்தது. இந்தப் படத்தை பிரமாண்டம் என்ற பெயரில் தமிழிலும் டப் செய்தார்கள்.
இப்படத்தின் ஆடியோ விழாவின்போது திரையிடப்பட்ட பாடல் காட்சிகளைப் பார்த்த இயக்குநர் பாரதிராஜா, படம் பிரமாண்டமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் நமீதாவின் அங்கங்கள்தான் படு பிரமாண்டமாக இருக்கிறது என்று வியப்படைந்து பேசினார்.
அந்த அளவுக்கு கவர்ச்சி கரை புரண்டோடிய பிரமாண்டத்தால், கன்னட ரசிகர்களிடம் நமீதாவுக்கு தனி இடம் கிடைத்து விட்டது.
இதனால் கர்நாடகத்தில் உள்ள பல தியேட்டர்களில் நமீதாவின் தமிழ், தெலுங்குப் படங்களை அதிகம் திரையிட ஆர்வம் கிளம்பியிருக்கிறதாம்.
இந்த கிராக்கியை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு நமீதாவை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்களும் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனராம்.


Click it and Unblock the Notifications











