'ஜில்'லுக்கு மாறும் 'சீரியஸ்' சித்ராங்கதா!

முதல் பார்வையிலேயே அட, ஸ்மிதா பாட்டீலைப் போலவே இருக்கிறாரே என்று எண்ண வைக்கும் முகவெட்டு, உடல் கட்டு சித்ராங்கதாவிற்கு. இதை அவரிடம் சொன்னால், என்னை ஸ்மிதாவுடன் ஒப்பிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனாலும் அது தவறு.
ஸ்மிதா பாட்டீல், மிகப் பெரிய நடிகை. நான் இப்போதுதான் 2 படங்களில் நடித்து முடித்திருக்கிறேன். ஸ்மிதா பாட்டீல் விதம் விதமான கேரக்டர்களில் நடித்தவர். அவரது இடத்திற்கு என்னை நினைத்துப் பார்க்கவே கூடாது. அது தவறு.
நிறைய படங்களில், நிறைய கேரக்டர்களில் நடிக்க வேண்டும். எனவே அவரது இடத்திற்குப் பக்கத்தில் கூட என்னால் வர முடியாது என்கிறார் அடக்கமாக.
ஹஸாரோன் குவாய்ஷென் அய்சி என்ற படம் மூலம் பிரபலமானவர் சித்ராங்கதா. இதுதவிர கல்: எஸ்டர்டே அன்ட் டுமாரோ படமும் அவருக்குப் பெயர் வாங்கித் தந்தது.
இப்போது ஸாரி, பய் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சித்ராங்கதா. முதல் இரு படங்களும் சற்று சீரியஸ் டைப்பானவை. ஆனால் ஸாரி பய் காமடி கலந்த ரொமான்ஸ் படம். இதில் சித்ராங்கதாவுடன் இணைந்து நடிப்பவர் சஞ்சய் தத்.
ஒனிர் இப்படத்தை இயக்குகிறார். கிட்டத்தட்ட 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கவுள்ளார் சித்ராங்கதா. இந்தப் படம் எனக்கு சரியான ரீ என்ட்ரி ஆக அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் சித்ராங்கதா, என்னால் காமெடியாகவும் நடிக்க முடியும், ரொமான்ஸ் காட்டவும் தெரியும் என்பதை இப்படம் நிரூபிக்கும் என்கிறார் புன்னகையுடன்.


Click it and Unblock the Notifications











