காத்திருக்க மாட்டேன் - முமைத்

குத்தாட்ட நாயகியாக வந்தவர் முமைத் கான். ஆனால் தெலுங்கில் திடீரென நாயகியாகி விட்டார். அங்கு சில படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்த முமைத்கான், தமிழிலும் நாயகியாக நடிக்க ஆர்வமாக உள்ளார்.
இருந்தாலும் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று காத்திருக்கவெல்லாம் மாட்டேன் என்கிறார்.
தற்போது பவுர்ணமி நாகம் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். யார் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் டபுள் ஹீரோக்கள்.
தனது ஹீரோயின் வாழ்க்கை குறித்து முமைத் கூறுகையில், தெலுங்கில் நான் நடித்த மைசம்மா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தேன்.
இருந்தாலும் தொடர்ந்து ஹீரோயின் வேடமாகத்தான் வர வேண்டும் என காத்திருக்கவெல்லாம் மாட்டேன். நல்ல கேரக்டர் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.
தமிழில் கவர்ச்சி வாய்ப்புகளே அதிகம் வருகின்றன. தவிர்க்க முடியாத வாய்ப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன்.
தற்போது பிரஷாந்த் நடிக்கும் மம்பட்டியான் படத்தில் நடித்து வருகிறேன் என்கிறார் முமைத்.


Click it and Unblock the Notifications











