இலியானாவும், கோப்பை காஃபியும்!

தெலுங்குத் திரையுலகில் திரிஷாவை ஓரம் கட்டிய திரிபுர சுந்தரி இலியானா. அவரது ஒல்லி இடைக்கும், அவரது டான்ஸ் வேகத்திற்கும் தெலுங்கு ரசிகர்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள். படத்தில் அவர் தோன்றும் பாடல் கட்சிகளில் கண்டிப்பாக யாரும் தம் அடிக்கப் போவதில்லை. அப்படி ஒரு அட்டகாசப் பாவையாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் இலியானா.
தமிழில் இவர் நடித்தது ஒரே ஒரு படம்தான் - கேடி. அதற்குப் பிறகு தமிழை சுத்தமாக மறந்து விட்டார் இலியானா. விஜய்யே 3 முறை இவரை கேட்டுப் பார்த்து விட்டார் - கூட நடிக்க. ஆனால் மூன்று முறையும் பெரிய கும்பிடு போட்டு விட்டார் இலியானா. இருந்தாலும் கோலிவுட்டிலிருந்து அவ்வப்போது இலியானாவுக்கு ஓலைகள் போய்க்கொண்டுதான் உள்ளன.
தெலுங்கில் இப்போதைக்கு நம்பர் ஒன் இலியானாதான். அவரது அழகுக்கும், வெற்றிக்கும் காரணம் என அவர் கூறுவது காஃபியைத்தான்.
எப்படி?
எனக்கு காஃபின்னா இஷ்டம். ஒரு நாளைக்கு எத்தனை கோப்பை காஃபி கொடுத்தாலும் சளைக்காமல் சாப்பிடுவேன். காஃபி சாப்பிட்டால் எனக்கு புத்துணர்ச்சியாகவும், பிரஷ்ஷாகவும் இருக்கும். ஒரு காஃபி குடித்தால் எவ்வளவு வேலையாக இருந்தாலும் தயங்காமல் செய்வேன்.
எனது உடல் அழகுக்கு காஃபியும் கூட ஒரு காரணம். நான் எப்போதும் சந்தோஷமாக இருக்கவும் இதுவே காரணம் என்கிறார் சின்னச் சிரிப்பை சிந்தியபடி.
பேஷ், பேஷ் ரொம்ப நன்னா இருக்கு!


Click it and Unblock the Notifications











