விரும்பும் ஜோதிர்மயி!

By Staff

Jyothirmayi
கல்யாணமான பெண்ணாக இருந்தாலும் நான் ஒரு நடிகை, கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்க மாட்டேன். தொடர்ந்து கவர்ச்சிகரமாக நடிப்பேன். அது பெரிய பாவம் இல்லை என்று தடாலடியாக கூறியுள்ளார் ஜோதிர்மயி.

நடித்து முடித்து களைத்த பின்னர்தான் பெரும்பாலான நடிகைகள் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாவார்கள். மாளவிகா போல செட்டிலான பின்னரும், செட்டுக்கு வந்தவர்களும் உண்டு.

ஆனால் ஜோதிர்மயி தலைகீழானவர். 2004ம் ஆண்டு இவருக்கு கல்யாணமானது. கணவர் பெயர் நிஷாந்த். சாப்ட்வேர் என்ஜீனியர். ஜோதிர்மயி, தமிழுக்கு வந்தபோது திருமதி ஜோதிர்மயி.

ஆனால் கல்யாணமான மேட்டரையே, ரொம்ப காலத்திற்கு கமுக்கமாக வைத்திருந்தார் ஜோதிர்மயி. ஆனால் அவர் கல்யாணமானவர் என்று தெரிய வந்ததால் பல பட வாய்ப்புகள் அவரிடமிருந்து விலகி ஓடின.

அப்படி இருந்தும் ஒருசில படங்களில் நடித்து வந்தார் ஜோதிர்மயி. பெரியார் படம் அவரது நடிப்புக்கு நல்ல சாட்சியாக அமைந்தது.

இந்த நிலையில்தற்போது கன்னடத்திற்கு போயுள்ளார் ஜோதிர்மயி. சிவராஜ் குமாருடன் அவர் இணைந்து நடித்துள்ள பந்து பாலகா என்ற படம் சமீபத்தில் ரிலீஸானது.

இந்தப் படம் குறித்து அவர்கூறுகையில், பந்து பாலகா படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். தொடர்ந்தும் கவர்ச்சியாகத்தான் நடிப்பேன். அதில் எந்தத் தவறும் இல்லை.

கல்யாணமானவர்கள் கவர்ச்சி காட்டக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. கவர்ச்சியாக நடிப்பது எனக்குப் பிடித்துள்ளது. தொடர்ந்து அப்படியே நடிப்பேன்.

கன்னடத்தில் எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எனவே தற்போதைக்கு தொடர்ந்து கன்னடத்தில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.

அதேசமயம் தமிழ் சினிமாக்காரர்களை சாதாரணமாக கூறி விட முடியாது. எனக்கு பேராதரவு கொடுத்தது தமிழ் சினிமாதான். முதல் படமான தலைநகரம், பின்னர் நான் அவனில்லை, பிறகு பெரியார் என தொடர்ந்து எனக்கு ஹிட் படங்களாக அமைந்தது அதிர்ஷ்டம்தான். எனவே தமிழை மறக்க மாட்டேன் என்கிறார் ஜோதிர்மயி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X