'செக்ஸி' பெண் காத்ரீனா!

புகழ் பெற்ற எப்.எச்.எம். இதழ் தனது இந்தியப் பதிப்பை தொடங்கியுள்ளது. அதன் முக்கிய அம்சமாக உலகிலேயே செக்ஸியான 100 பெண்கள் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தி பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் முதல் பத்து இடங்களில் இந்திய அழகிகளின் ஆதிக்கமே அதிகம். முதலிடத்தைப் பிடித்து, உலகிலேயே செக்ஸியான பெண்ணாக காத்ரீனா கைப் தேர்வு செய்யப்பட்டார். அவரைப் பார்த்தவுடனேயே பரவசம் ஏற்படுவதாக கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனராம்.
2வது இடத்தைப் பிடித்துள்ளார் மேகான் பாக்ஸ். இவர் சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் முதலிடத்தைப் பிடித்தவர். தற்போது 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டார்.
3வது இடத்தில் இருப்பவர் நெட்டையழகி கரீனா கபூர். நான்காவது இடத்தில் தீபிகா படுகோன் இருக்கிறார். ஓம் சாந்தி ஓம் படம் கொடுத்த பூஸ்ட்டால் இந்த லெவலுக்கு முன்னேறியுள்ளார் தீபிகா. ஐந்தாவது இடம் 'அழகுப் பிசாசு' பிபாஷா பாசுவுக்கு.
உலகப் பேரழகியாக முடிசூட்டப்பட்ட ஐஸ்வர்யா ராய்க்கு இந்தப் பட்டியலில் 6வது இடம்தான் கிடைத்துள்ளது. இருந்தாலும் இவருக்கு அடுத்த இடத்தில் ஏஞ்செலீனா ஜூலி இருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா 8வது இடத்திலும், லாரா தத்தா 9வது இடத்திலும் உள்ளனர். சுஷ்மிதா சென்னுக்குக் கிடைத்திருப்பது 10வது இடம்.
இதில் ஒரு ஆச்சரியம், இந்தியாவின் சார்பில் இதுவரை அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு முடி சூடிய அத்தனை பேரும் (சுஷ்மிதா, ஐஸ்வர்யா, பிரியங்கா, லாரா தத்தா) டாப் 10க்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











