மலையாளம் ரொம்ப போர்-ஓவியா

By Sudha

Oviya
மலையாள சினிமா ரொம்ப போர் என்கிறார் அங்கிருந்து தமிழுக்கு வந்து நாயகியாகியிருக்கும் ஓவியா.

களவாணி படத்தில் நடித்துள்ளவர்தான் ஓவியா. பார்க்கவ பளிச்சென கொடி முந்திரிப் பழம் போல உள்ளார் ஓவியா. அழகோ, அழகு என திரையுலகில் பாராட்டுகிறார்களாம் ஓவியாவை. இந்தப் பூரிப்பில் இருக்கும் ஓவியாவுக்கு முதல் படமான களவாணி வெற்றிப் படமாகியிருப்பதால் பூரிப்பு கூடிப் போயுள்ளதாம்.

அதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் எனக்கு சிட்டி கேர்ள் பாத்திரம்தான் கொடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் பாவாடை, தாவணியுடன் வரும் கிராமத்து கதாபாத்திரம் என்றுகூறியதும் கொஞ்சம் சங்கடமாகி விட்டது. ஆனால் கதையைக் கேட்டும் அசந்து போய் விட்டேன் என்று கூறிச் சிரிக்கிறார் ஓவியா.

சிரிப்பது எப்படி, நடப்பது எப்படி, பேசுவது எப்படி என டைரக்டர் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தாராம். அதன் பின்னரே தைரியம் வந்ததாம் ஓவியாவுக்கு.

சரி உங்க ஊர்ப் பொண்ணுங்க இங்க நிறைய ஆதிக்கம் செலுத்துகிறார்களே என்று கேட்டால்,

அதிகம் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் மலையாளத்தில் சீனியர் நடிகைகளுக்குத்தான் மதிப்புதருகிறார்கள். மேலும் அங்கு புதுமுகங்களை அதிகம் அறிமுகப்படுத்துவதில்லை. ஆனால் தமிழ் அப்படியில்லை. நிறையப் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதனால்தான் நிறையப் பேர் வருகிறார்கள்.

உங்களுக்கு ஒன்னு தெரியுமா, மலையாள சினிமா ரொம்ப போர். காட்சிகள் போர், கதைகளும் போர். தமிழில்தான் விதம் விதமான கதைக்களத்துடன் படங்கள் உருவாகிறது என்று போகிற போக்கில் சேம் சேடு கோல் போட்டார் ஓவியா.

பரவாயில்லையே, பிழைக்கும் வழி தெரிஞ்ச பொண்ணா இருக்கே...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X