அப்பாவியா நடிக்கணும் ..மம்தா

By Staff

Mamtha Mohandoss
குசேலனில் ரஜினியின் இயக்குநராக இரு காட்சிகளில் நடித்தாலும், எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது என நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார். கிராமத்து அப்பாவி பெண் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது இப்போதைய கனவாம்.

தமிழில் சிவப்பதிகாரம் படத்தில் அறிமுகமான மலையாள நடிகை மம்தா, சரியான வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்குப் பக்கம் போனார். அங்கே தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.

முறையான சங்கீதம் கற்றவர் என்பதால் பின்னணிப் பாடகியாவும் புகழ்பெற்று விங்குகிறார் தெலுங்கில். குசேலனில் ரஜினியை இயக்கும் சினிமா டைரக்டர் வேடத்தில் நடித்த பிறகு அவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

தெலுங்கில் இப்போது பிஸான நடிகையாகி விட்டேன். தெலுங்கில் பல ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கவே விரும்புகிறேன்.

தமிழில் சிவப்பதிகாரம் படத்தில் நடித்தேன். அதன்பின் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். குசேலனில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் அது. வாழ்க்கையில் குசேலனில் நடித்த தினங்களை மட்டும் மறக்க மாட்டேன்.

இப்போது குரு என் ஆளு படத்தில் நடித்து வருகிறேன். இதில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடம். தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக சின்தகயாலா ரவி படத்தில் நடிக்கிறேன்.

இந்திய பாரம்பர்ய உடைகளில் நடிக்கவே எனக்கு விருப்பம். ஆனால் தொடர்ந்து எனக்கு மாடர்ன் உடையை மாட்டி நடிக்க வைக்கிறார்கள். கிராமத்து அப்பாவி பெண்ணாக ஒரு படத்திலாவது நடிக்க விரும்புகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் சம்பளம் பற்றிக் கூட யோசிக்காமல் ஒப்புக் கொள்வேன்... என்கிறார் மம்தா.

கிராமத்து வேடங்களில் நடிக்க நாயகிகளே இல்லை எனப் புலம்பும் பாரதிராஜா வாரிசுகளே... உங்களுக்கு ஒரு கிராமத்து தேவதை ரெடி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X