ஸ்ரீகாந்த் அம்மாவாக மந்த்ரா!

ப்ரியம் படத்தில் அருண்குமாருக்கு (இப்போ அருண் விஜய்) ஜோடியாக அறிமுகமாகி பிரபு, கார்த்திக், விஜய், மோகன்பாபு, சிரஞ்சீவி என எல்லா முன்னணி நடிகர்களோடும் நடித்து ஓய்ந்து தெலுங்கு ஒளிப்பதிவாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்ட மந்திரா, கொஞ்ச காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கியிருந்தார்.
இப்போது இன்னும் குண்டாகிவி்ட்ட மந்த்ரா, தெலுங்கு டிவி ஒன்றில் டான்ஸ் போட்டி புரோகிராமின் நடுவராக தலைகாட்டி வருகிறார்.
அப்படியே மீண்டும் சினிமா களத்தில் குதித்துவிட்டார், அம்மா வேடத்தில்.
ஃபாஸில் இயக்கும் புதிய தமிழ்ப் படத்தில் ஸ்ரீகாந்துக்கு அம்மாவாக நடிக்கப் போகிறாராம். சமீபத்தில் சற்றே தயங்கித் தயங்கி ஸ்ரீகாந்த் இந்த விஷயத்தை மந்த்ராவிடம் பேசியபோது, சினிமாவில் இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்த்தது தானே... நிச்சயம் நடிக்கிறேன் என்றாராம் ஸ்போர்டிவ்வாக.
அம்மா வேடத்துக்கு மந்த்ரா தயார் என்ற தகவல் தெரிந்த உடனே, மீண்டும் நிறைய வாய்ப்புகள் அவர் வீட்டுக் கதவைத் தட்டத் தொடங்கிவிட்டதாம்.


Click it and Unblock the Notifications











