மீனாட்சியின் டைரக்ட் டீலிங்!

கருப்பசாமி குத்தகைதாரரில் அடக்கம் ஒடுக்கமாக வந்து போன மீனாட்சிக்கும், லேட்டஸ்ட் மீனாட்சிக்கும் இடையே, மதுரைக்கும், பாரீஸுக்கும் இடையிலான வித்தியாசம். அப்படி ஒரேயடியாக மாறிப் போய் விட்டார் மீனாட்சி.
அதை விட விசேஷமாக, எப்படிப்பட்ட கிளாமராக இருந்தாலும் தயாராக இருக்கும் மீனாட்சி தனது பட வாய்ப்புகளை நேரடியாக தானே பேசி டீல் செய்கிறாராம்.
இதற்காக மேனேஜர் என யாரையும் வைத்துக் கொள்ளாமல், எதுவாக இருந்தாலும் என்னிடமே நேரடியாக வரலாம். பேசலாம் என்று படு தெளிவாகப் பேசுகிறாராம்.
இதனால் இடைச் செருகல், இடை பொறுமல் எதுவும் இல்லாமல் நேரடியாக மீனாட்சியிடம் விலாவாரியாக பேசி அவரை தங்களது படங்களுக்கு புக் செய்து வருகின்றனராம் தயாரிப்பாளர்கள்.
தோரணை படத்தில் மீனாட்சி செமத்தியான குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளாராம். நாயகன் விஷாலே விரும்பிக் கேட்டுக் கொண்டதால் இந்த குத்துப் பாட்டுக்கு ஸ்பெஷல் ஆட்டம் போட்டு விட்டு வந்தாராம் மீனாட்சி.


Click it and Unblock the Notifications











