புதுக் காதலில் நயனதாரா?

சிம்புவுடனான காதல், பின்னர் ஏற்பட்ட பிரிவு ஆகியவற்றைத் தொடர்ந்து எந்தவித கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்து வந்தார் நயனதாரா. இப்போது மீண்டும் ஒரு காதல் கிசுகிசுவில் நயனதாராவின் பெயர் அடிபடுகிறது.
நயனதாராவுக்கும், கேமராமேன் நீரவ் ஷாவுக்கும் இடையே காதல் என்பதுதான் அந்த புதுச் செய்தி.
அஜீத்துடன் நயனதாரா இணைந்து நடித்த பில்லா படத்தில் நீரவ் ஷாதான் கேமராமேன். அப்போதுதான் காதல் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
அதுவரை யாரும் காட்டியிராத அழகுடன் நயனதாரா படம் முழுக்க வந்ததற்கு நீரவ் காட்டிய தனிப்பட்ட அக்கறைதான் காரணமாம். இதனால்தான் அவர் மீது நயனதாராவுக்கு காதல் பிறந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் சேர்ந்து சில இடங்களுக்கு சென்று வந்ததாகவும் கூறுகிறார்கள்.
இந்தக் காதல் செய்தி உண்மையா, இது எதுவரை போகும் என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்.
Comments


Click it and Unblock the Notifications