கிளாமர் கோதாவில் நவ்யா?

பெரிய அளவில் கிளாமர் காட்டமாலேயே இத்தனை காலத்தை ஓட்டி விட்ட நவ்யா மலையாளத்தில் முன்னணியில் இருந்தபோதே தமிழுக்கும் வந்தவர். அவர் நடித்த முதல் படத்திலேயே நடிப்பால் பேசப்பட்டவர். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி அவருக்கு பிரேக் கொடுத்தது. இதையடுத்து தமிழில் மளமளவென்று நடிக்க ஆரம்பித்தார்.
சேரனுடன் நடித்த மாயக்கண்ணாடிக்குப் பிறகு அவரது வேகத்தில் தடை ஏற்பட்டது. சமீபத்தில் அவர் நடித்த சில நேரங்களில் வெளியாகி மறுபடியும் நவ்யாவுக்கு உயிர் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் கிளாமர் கோதாவில் குதிக்க நவ்யாவும் தீர்மானித்து விட்டார். இதற்கு முதல் படியாக ஸ்ரீகாந்த்துடன் இணைந்து நடித்துள்ள எட்டப்பன் படத்தில் சில நெருக்கமான காட்சிகளில் மகா கிளாமராக நடித்துள்ளார்.
அவரும், ஸ்ரீகாந்த்தும் இடம் பெறும் படுக்கையறைக் காட்சிகள் படு கிறக்கமாக படமாக்கப்பட்டுள்ளதாம். இந்தப் படத்தில் தனது கிளாமருக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து கிளாமராக தொடர்வதா, அப்படி தொடர்ந்தால் எத்தகைய அளவுகோலை கடைப்பிடிப்பது என்பது குறித்து முடிவு செய்யவுள்ளாராம் நவ்யா.
நவ்யா ஏற்கனவே அமிர்தம் படத்தில் லேசு பாசாக கிளாமர் காட்டி நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் சரிவர பேசப்படாததால், கிளாமரை ஏறக்கட்டினார். இந்த நிலையில் மறுபடியும் கிளாமர் பக்கம் அவர் தலை சாய்க்கவிருப்பது தயாரிப்பாளர்கள் சிலரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளதாம்.
எப்படா எட்டப்பன் ரிலீஸாகும், நவ்யாவை தங்களது படத்திற்குப் புக் செய்யலாம் என காத்திருக்க ஆரம்பித்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











