தமிழில் நீனு கார்த்திகா!

தமிழுக்குதான் இவர் புதுசே தவிர, நடிப்புக்கு அல்ல. மோகன்லாலின் ரெட் சில்லிஸ் படத்தில் நடித்தவர். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
இப்போது இரு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். சுராங்கனி மற்றும் மெய்யாலுமே பொய் படங்களில் இவர் தான் நாயகி.
"தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனக்குக் கனவு. இப்போது அது நிறைவேறுவதில் மகிழ்ச்சி. எடுத்த எடுப்பில் இரு படங்கள் கிடைத்திருப்பது சந்தோஷமான பயத்தைத் தருகிறது. மெய்யாலுமே பொய் படத்தில் எனக்கு மிகவும் சுவாரஸ்யமான கேரக்டர்.
இன்னும் நிறைய நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே இப்போதைய லட்சியம். நீண்ட கால லட்சியம், இங்கேயே சொந்த வீடு வாங்கி செட்டிலாகிவிட வேண்டும்..." என்கிறார் படபடப்பாக நீனு கார்த்திகா.
கண்டிப்பா நடக்கும் அம்மணி... தமிழ் ரசிக மகா ஜனங்க 'ரொம்ப நல்லவங்க'!
Comments


Click it and Unblock the Notifications