'ஓ போடு' ராணி இப்போ சின்ன 'மாமி'!

கன்னட பட உலகுக்குப் போனவர் அங்கேயே ஒருவரைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானார். பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் ஓ போடு... பாட்டுக்குப் பிறகு பெரிதாக ஒன்றும் அமையவில்லை. மதமதர்ப்பான உடலுடன் சில மலையாளப் படங்களிலும் கூட நடித்தார்.
இப்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வருகிறார்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியுள்ள பந்தயம் படத்தில் கெட்ட ஆட்டம் போடுகிறாராம் அம்மணி.
நிதின் சத்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சிந்துதுலானி நாயகியாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய்யும் ஒரு காட்சியில் வருகிறார், நடிகர் விஜய்யாகவே. எம்.ஜி.ஆர், எனும் படத்தில் நாயகனாக நடிப்பது போன்ற வேடம் விஜய்க்கு. நிதின் சத்யா, தீவிர விஜய் ரசிகராக நடிக்கிறார்
இந்தப் படத்தில் 'சின்ன மாமியே...' என்ற இலங்கை 'பப்பிசைப்' பாடல் விஜய் ஆண்டனி இசையில் ரிமீக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் சிந்து துலானியுடன் ஆடியுள்ளார் ராணி.
ஓ போடு பாடலை விட இந்த சின்ன மாமியே பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகுமாம்.
இந்தக் கவர்ச்சி போதாதென்று நினைத்தாரோ என்னமோ... மற்றொரு பாடலுக்கு மேக்னா நாயுடுவையும் மகா கவர்ச்சியாக ஆட வைத்துள்ளாராம் எஸ்.ஏ.சி.
எஸ்ஏ சந்திரசேகர் படமென்றால் அரசியல் குத்து, சட்டக் குத்துகளுக்கு பஞ்சமிருக்காது முன்பெல்லாம். இப்போது அதனுடன் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம், கவர்ச்சிக் குத்து!


Click it and Unblock the Notifications











