பூரிப்பில் பூனம் பாஜ்வா!

சன் பிக்சர்ஸின் தயாரிப்பான தெனாவெட்டுதான் பூனம் பாஜ்வாவின் முதல் படம். ஆனால் அதற்குப் பின்னர் ஒப்புக் கொண்டு நடித்த சேவல் முந்திக் கொண்டு கொக்கரித்து விட்டதால், சேவல் பட நாயகி என்ற பெயர் கிடைத்து விட்டது பூனத்திற்கு.
சேவல் ஹிட் ஆகியுள்ளதால் சந்தோஷமாக உள்ளார் பூனம். அதிலும் சேலை, தாவணியில் அச்சு அசல் தமிழ்ப் பொண்ணு மாதிரியே இருக்கீங்க என்று நிறையப் பேர் பாராட்டியுள்ளனராம்.
தெனாவெட்டு படமும் கோலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால், பூனத்திற்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. பல புதுப் பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். இதனால் பூரிப்பில் இருக்கும் பூனம், தெனாவெட்டு வந்தவுடன் புதிய படங்களை ஒப்புக் கொள்ள முடிவு செய்துள்ளாராம்.
தெனாவெட்டும் ஹிட் ஆனால் அப்படியே சம்பளத்தையும் உயர்த்தி விடும் திட்டம் உள்ளதாம் பாஜ்வாவிடம்.
பொழச்சுக்குவாங்க...
Comments


Click it and Unblock the Notifications