கிரிக்கெட் சூதாட்டம்-நடிகை நீத்து சந்திராவிடம் ஸ்காட்லாந்து யார்ட் விசாரித்ததாக பரபரப்பு

By Sudha

Neetu Chandra
மும்பைச பாகிஸ்தான் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக நடிகை நீத்து சந்திராவிடம் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் விசாரணை நடத்தியதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதனை நீத்து மறுத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஆசிப்புடன் நீத்து சந்திராவுக்குத் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. மேலும் கிரிக்கெட் சூதாட்டத்திலும் நீத்துவுக்குத் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இதை தனது பிஆர்ஓ மூலம்நீத்து மறுத்திருந்தார். இந்த நிலையில் சூதாட்டப் புகார் தொடர்பாக நீத்துவிடம் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் விசாரணை நடத்தியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆசிப்புக்கும், நீத்துவுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட இமெயில்கள், எஸ்எம்எஸ்கள் தொடர்பாக இந்த விசாரணை நடந்ததாக இத்தகவல் கூறுகிறது.

ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் நீத்து. இதுகுறித்து அவரது பிஆர்ஓ கூறுகையில், ஆசிப்புக்கு நீத்து மெயில் அனுப்பியதாகவும், எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதில் சற்றும் உண்மை இல்லை.

கிரிக்கெட் சூதாடத்தில் எந்த வகையிலும் நீத்துவுக்குப் பங்கில்லை. மேலும் எந்த கிரிக்கெட் வீரருடனும் அவருக்குத் தொடர்பு இல்லை.

இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பி வருவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதுகுறித்து நீத்து யோசித்து வருகிறார் என்றார்.

நடிகை நீத்து சந்திரா தற்போது மங்காத்தா படத்தில் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X