பூஜா 'மலை .. மலை'!

By Staff

Pooja with Naren
நான் கடவுள் ரிலீஸுக்காக காத்திருக்கும் பூஜா, அடுத்து அருண் விஜய்யுடன் இணைந்து மலை மலை என்ற படத்தில் நடிக்கப் போகிறார்.

பாலாவின் இயக்கத்தில் பூஜா நடித்துள்ள நான் கடவுள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல கதாநாயிககள் பரிசீலிக்கப்பட்டு கடைசியாக பூஜா புக் ஆகி நடித்துள்ள படம். படத்தில் பூஜாவுக்கு செமத்தியான கேரக்டர். நடிப்புக்கு நல்ல தீனி போட்டுள்ளாராம் பாலா. இந்தப் படம் எனக்கு பெரிய பிரேக் தரும் என்று பூஜாவும் கூறி வருகிறார்.

நான் கடவுள் வெளியாகும் வரை வேறு படத்தில் நடிப்பதில்லை என்று காத்திருந்தார் பூஜா. படம் விரைவில் திரைக்கு வரும் எனத் தெரிகிறது. இதையடுத்து புதிய படம் ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளார் பூஜா.

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் மலை மலை என்ற படத்தில் பூஜா நாயகியாக நடிக்கிறார். அருண் விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ளார். வில்லன் - பிரகாஷ் ராஜ்.

படத்திற்கு மலை மலை என வித்தியாசமாக பெயர்வைத்துள்ளார் வெங்கடேஷ். இது சென்டிமென்ட் தலைப்பு என்கிறது வெங்கடேஷ் தரப்பு.

இவரது இயக்கத்தில் முன்பு வெளியான சாக்லேட் படத்தில் இடம் பெற்ற மலைமலை பாட்டு மெகா ஹிட். அந்த சென்டிமென்ட்டில்தான் மலை மலை என பூஜா படத்துக்குப் பெயர் சூட்டியுள்ளார் வெங்கடேஷ். அடுத்து சரத்குமாரை வைத்து இயக்கப் போகும் படத்துக்கு இமயமலை என பெயர் சூட்டியுள்ளாராம் வெங்கடேஷ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X