மம்முட்டி மனைவியாக ரிச்சா!

தமிழ் மூலம் சினிமாவுக்கு வந்தவர் ரிச்சா. அவர் முதன் முதலில் விஜய்யுடன் இணைந்து நடித்த ஷாஜகான், ரிச்சாவுக்கு 'ரிச்'சான மார்க்கெட்டை ஏற்படுத்தித் தரவில்லை. இருந்தாலும் தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தார் ரிச்சா.
உனக்கும் எனக்கும் படத்தில் சூப்பர் கேரக்டரில் கலக்கியிருந்தார். ஆனாலும் கூட தொடர்ந்து தமிழில் நடிக்க அவரும் ஆர்வம் காட்டவில்லை. வாய்ப்புகளும் வரவில்லை.
இந்த நிலையில் மலையாளத்தில் நடிக்கக் கிளம்பி விட்டார் ரிச்சா.
முதல் படத்திலேயே மம்முட்டியுடன் இணைகிறார் ரிச்சா. இப்படத்தில் மம்முட்டியின் மனைவியாக நடிக்கவிருக்கிறாராம் ரிச்சா பலோட்.
மலையாளமாவது ரிச்சாவுக்கு மங்களகரமாக இருக்கட்டும்!
Comments


Click it and Unblock the Notifications